பாசன பகுதியை பாதுகாக்க கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் 20ம் தேதி நடக்கிறது

தொண்டி, ஜூலை 18: காவிரி பாசன பகுதியை பாதுகாக்க வலியுறுத்தியும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும் வரும் 20ம் தேதி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. காவிரி பாசன பகுதியை பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி வரும் 20ம் தேதி வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற அழைப்பு விடுத்து துண்டறிக்கை வழங்கப்பட்டது. தொண்டியில் பேரழிவிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும், ஹைட்ரோ கார்பன் திட்டம், சாகர் மாலா திட்டம் உள்ளிட்ட பேரழிவை ஏற்படுத்தும் திட்டங்களை மத்திய,மாநில அரசுகள் கைவிட வேண்டும்.

இதனை வலியுறுத்தி வரும் 20ம் தேதி மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரையிலும் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற அழைப்பு விடுத்து தொண்டி பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், விவசாயிகள் உட்பட பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரம் கொடுத்தனர். இதில் தலைவர் லேலின், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகம், தொண்டி ஆனந்தன், இயற்கை ஆர்வலர் செந்தில், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நெட் பிரச்னையால் ஆதார்,வாக்காளர்...