×

உலக நீதி நாளை முன்னிட்டு சட்டவிழிப்புணர்வு பிரசாரம் முதன்மை நீதிபதி துவக்கி வைத்தார்

ராமநாதபுரம், ஜூலை 18:  ராமநாதபுரம் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்டவிழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் ஜூலை 17ம் தேதி உலக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை யொட்டி பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரின் முக்கிய இடங்களில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் நீதிபதி பிரீத்தா வரவேற்றார். மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார். 1988ம் ஆண்டு ஜூலை 17ம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்ட நாளை உலக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நிரபராதிகள் தண்டிக்கப்பட கூடாது என்பதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டிற்கான நீதியை பெற சர்வதே நீதிமன்றம் உள்ளது என்ற நம்பிகையூட்டுவதே இந்நாளின் நோக்கமாகும் என்றார்.
நிகழ்ச்சியில் மக்கள் நீதிமன்ற நிரந்தர தலைவர் நீதிபதி ராமகிருஷ்ணன், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் தனியரசு, பகவதியம்மாள், ரஃபி, தலைமை குற்றவியல் நடுவர் சுபத்ரா, கூடுதல் மகிளா நீதிபதி ராதாகிருஷ்ணன், வக்கில் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை