திருமங்கலத்தில் மின்குறைதீர் கூட்டம்

மதுரை, ஜூலை 18:  திருமங்கலம் மின் ேகாட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் இன்று (ஜூலை 18)காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கிறது. திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் இக்குறைதீர் கூட்டத்தில் மதுரை மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் பிரீடா பத்மினி கலந்துகொண்டு, குறைகளை கேட்டு, நடவடிக்கைகள் மேற்ெகாள்ள உள்ளார். எனவே திருமங்கலம் கோட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர்கள், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, தங்களது மின்விநியோகம் தொடர்பான குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.


Tags :
× RELATED பைக்குகள் மோதி வாலிபர் சாவு