கடந்த ஓராண்டில் 68 பேர் குண்டாஸில் கைது
மதுரை, ஜூலை 18: மதுரை நகரில் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் கடந்த ஒரு ஆண்டில் 68 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை நகரில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் வெளியில் வந்து மீண்டும், மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். எனவே, விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவதற்காகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாக்கவும், பொது ஒழுங்கு பரமாரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்படாமல் முற்றிலும் தடுக்கவும் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த வருடம் ஜூன் மாதம் 13ம் தேதி பதவி ஏற்றார். அன்று முதல் நேற்று முன்தினம் வரை 68 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் குண்டர் சட்டத்தில் இருந்து, வெளியில் வந்தவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் தனிப்படை அமைக்கப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags :
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது