வேலூர் மக்களவையில் ஜூலை 21 முதல் மதுரை மாவட்ட திமுகவினர் பிரசாரம் செய்ய முடிவு

மதுரை, ஜூலை 18: வேலூர் மக்களவை தொகுதியில் மதுரை மாவட்ட திமுகவினர் வரும் 21ம் தேதி முதல் வீடுதோறும் பிரசாரம் செய்து ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளனர்.மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று திருப்பாலையில் நடந்தது. வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பரந்தாமன் தலைமை வகித்தார். கூட்ட தீர்மானங்களை விளக்கி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் பேசினார். ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுகவினருக்கு ேக.வி.குப்பம் பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார். இங்கு ஜூலை 21ம் தேதி முதல் முகாமிட்டு வீடுதோறும் பிரசாரம் செய்து, திமுக வேட்பாளரின் அமோக வெற்றிக்கு பாடுபடுவது என முடிவு செய்யப்படுகிறது.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஏபி.ரகுபதி, சிறைச்செல்வன், சுதந்திரம், மாவட்ட துணை செயலாளர் பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி, பேரூர் செயலாளர் பிரகாஷ், பால்பாண்டி, அணி நிர்வாகிகள் ராஜா, மருதுபாண்டியன், சசிகுமார், ரேணுகாஈஸ்வரி மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


Tags :
× RELATED கலப்பட பெட்ரோல் விற்பதாக கூறி ‘பங்கை’...