×

மழைநீர் சேகரிப்பு கூட்டத்தில் உறுதி மின்சாரம் தாக்கி டிரைவர் பலி: கிளீனர் படுகாயம்

மேலூர், ஜூலை 18: கொட்டாம்பட்டி அருகே லாரியில் பேரல் ஏற்றிய போது மின்சாரம் தாக்கியதில் டிரைவர் உயிரிழந்தார். கிளீனர் படுகாயமடைந்தார். கொட்டாம்பட்டி அருகே காரியேந்தில்பட்டியில் உள்ள தார் கலவை தொழிற்சாலையில் கீழவளவை சேர்ந்த முருகேசன் (39) என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலி பேரல்களை லாரியில் ஏற்றும் பணியில் முருகேசனும், இவரது உதவியாளர் சமுத்திராபட்டியை சேர்ந்த பாண்டியும் (40) ஈடுபட்டிருந்தனர். லாரியின் உயரம் கூடுதலாக இருந்ததால் பேரல்களை ஏற்ற முடியவில்லை. இதனால் டிரைவர் லாரியின் பின்பக்கத்தை உயர்த்தியுள்ளார்.

அப்போது லாரி அருகில் சென்ற மின்வயர் மீது உரசியபடி இருந்துள்ளது. இதனை பார்க்காமல் முருகேசனும், பாண்டியும் பேரல்களை லாரியில் ஏற்ற, அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலே முருகேசன் பலியானார். படுகாயங்களுடன் பாண்டி சிகிச்சைக்காக மேலூர் ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags :
× RELATED மேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு