பழநியில் காமராசர் பிறந்தநாள் விழா

பழநி, ஜூலை 18: பழநியில் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டு-புத்தகங்கள் வழங்கப்பட்டன.காமராசர் பிறந்தநாள் முன்னிட்டு பழநியில் காமராசர் பேரவை சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமாகா அலுவலகத்தில் காமராசரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளிக்குழந்தைகளுக்கு காமராசரின் எளிய வாழ்க்கை முறை, நேர்மை, அரசியல் சாதுர்யம், அர்ப்பணிப்பு குணம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகரத் தலைவர் சுந்தர், வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜ், நகர நிர்வாகிகள் தங்கவேல், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertising
Advertising

Related Stories: