×

பைக்கில் வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் அறிவுரை

திண்டுக்கல், ஜூலை 18: அனைத்து தரப்பினரும் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணிய விருப்பம் இல்லாதவர்கள் சைக்கிளிலில் செல்லலாம் என சக்திவேல் எஸ்.பி., காட்டமாக கூறினர்.திண்டுக்கல்லில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை விளக்கும் விழிப்புணர்வு பேரணியை சக்திவேல் எஸ்.பி., துவக்கி வைத்தார். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்தன், ஆய்வாளர் விஜயக்குமார்.  வாசவி தங்க மாளிகையின் உரிமையாளர் ரவி, டி.எஸ்.பி., மணிமாறன், இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ்குமார், உலகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதுகுறித்து எஸ்.பி. கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் டூவீலர்கள், பைக்குகளில் செல்வர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது.

மேலும் ஒரு வாரம் முக்கிய இடங்களில் வாகனங்கள் நின்று ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வ பிரசாரம் செய்யும். இதில் உங்கள் குடும்பத்தை காப்பாற்ற நீங்கள் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும். ரத்தம் சிந்துவதைவிட வேர்வை சிந்துவது சிறந்தது. உடலில் எங்கு அடிபட்டாலும் காப்பாற்றி விடலாம் தலையில் அடிபட்டதால் காப்பாற்ற முடியாது. மூளை சாவு அடைந்தவர்கள் நடைபிணமாகி விடுவார்கள். ரூ.70 ஆயிரம் செலவழித்து பைக் வாங்குபவர்கள் ரூ.300 செலவழித்து ஹெல்மெட் வாங்க முடியாதா, உங்கள் குடும்பத்தினரை நினைத்து ஹெல்மெட் அணியுங்கள் என பலவிதமான உதாரணங்களுடன் விழிப்புணர்வு செய்வார்கள். ஒரு மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஆயிரம் பேருக்கு அபராதம் விதித்துள்ளோம்.

வேகமாக வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் ஓட்டுவது, மொபைல் போன் பேசிக் கொண்டே ஓட்டுவது உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்ட வாகன ஓட்டிகளின் 5 ஆயிரம் லைசென்ஸ்கள் ஒராண்டில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முதல் கட்டமாக போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அனைத்து தரப்பு மக்களுக்கும் ஹெல்மெட் அணிய வேண்டும், என்றார்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...