ராணுவ வீரர் மனைவியிடம் பணம் அபேஸ் செய்தவர் கைது


வத்தலக்குண்டு, ஜூலை 18: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மேலக்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. ராணுவவீரர். இவர் மனைவி சித்ரா (49). இவர் நேற்று முன்தினம் மாலை வத்தலக்குண்டுவிலுள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தார். அப்போது அங்கிருந்த வாலிபர்கள் 3 பேர் தாங்கள் பணம் எடுக்க உதவுதாக கூறி ரூ.44,500 ஐ அபகரித்துக்கொண்டு சித்ராவிடம் ஏடிஎம்மிஷினில் பணம் இல்லை என்று கூறிவிட்டு நைசாக அங்கிருந்து நழுவி விட்டனர். வங்கி அதிகாரிகள் மூலம் பணம் பறிபோனதை உணர்ந்த சித்ரா வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். வத்தலக்குண்டு எஸ்ஐ கலையரசன் வங்கி ஏடிஎம்மிலுள்ள கேமராவை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினார். இதில் புகையிலைபட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் வேளாங்கண்ணியை (27) கைது செய்து அவரிடமிருந்த ரூ.34 ஆயிரத்தை கைப்பற்றினார். அவனோட சேர்ந்த கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகிறார்.

Tags :
× RELATED கேங் மேன் உடல்தகுதி தேர்வு மழையால் தள்ளிவைப்பு