உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் செம்மொழி தமிழ்ச்சங்கம் கோரிக்கைபழநி, ஜூலை 18: உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென செம்மொழி தமிழ்ச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது.பழநியில் செம்மொழி தமிழ்ச்சங்க நிர்வாகி டாக்டர். விருப்பாட்சி ராமகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியதாவது: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் மத்திய அரசின் நிதி பலவற்றை பெற முடியாத நிலை உள்ளது. இதனால் ஊராட்சிகள் நிதிநெருக்கடியில் உள்ளன. எனவே, உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். பீகாரில் கள் விற்பனை செய்ய தடையில்லை. அதுபோல் தமிழகத்தில் கள் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். சர்க்கரை உற்பத்தி அதிகமாகி உள்ளதால் ஆலைகள் நஷ்டமடைந்துள்ளன. அவற்றை எத்தனால் தயாரிப்பு ஆலைகளாக மாற்றினால், அரசிற்கு பெட்ரோல் இறக்குமதி செலவு குறையும். 2022ல் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்க வேண்டுமென்றால், விவசாய கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும். நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு படிப்படியாக அரசு தடை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

× RELATED பணியாளர்கள் ஆவேசம் சூதாடியவர்கள் கைது