கொடைக்கானல் மலைப்பகுதியில் மண்ணெண்ணெய் விநியோகத்தில் குளறுபடி

கொடைக்கானல், ஜூலை 18: கொடைக்கானல் மலைப்பகுதியில் மண்ணெண்ணெய் வினியோகத்தில் குளறுபடி நடந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்கொடைக்கானல் மலைப்பகுதியில் மேல் மற்றும் கீழ் மலைப்பகுதிகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 50 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு தேவைப்படும் அரிசி மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் நேற்று கொடைக்கானல் மலைப்பகுதியில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.வழக்கமாக கொடைக்கானல் நகரம் மற்றும் மேல் மலைப்பகுதிகளுக்கு சுமார் 21,000 லிட்டர் மன்னனை விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று 13 ஆயிரத்து 430 லிட்டர் மட்டுமே திண்டுக்கல் மண்ணெண்ணெய் கிடங்கிலிருந்து அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. சுமார் 8 ஆயிரத்து 280 லிட்டர் வழங்கப்படாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இதுதவிர கீழ் மலைப்பகுதிகளிலும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளுக்கும் 50 சதவீதம் அளவிற்கு மண்ணெண்ணெய் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இந்த குளறுபடிகள் காரணமாக ரேஷன் கடைக்கு மண்ணெண்ணெய் வாங்க வந்த பொதுமக்கள் பாதிக்கும் மேற்பட்டோர் மன்ணெண்ணெய் கிடைக்காமல் வீடு திரும்பினர். தங்களது ஒரு நாள் கூலியையும் இழந்து மண்ணெண்ணெயும் கிடைக்காமல் பொதுமக்கள் குறிப்பாக மலைவாழ் கிராம மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.
Advertising
Advertising

இதுபற்றி கொடைக்கானல் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் தரிடம் கேட்டபோது கடந்த மாதம் கூட்டுறவு பண்டகசாலை கடைகள் 24 கடைகளுக்கு மொத்தம் 21 ஆயிரத்து 710 லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது. இதுபோல கடந்த மே மாதத்தில் 21 ஆயிரத்து 10 லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த மாதம் இந்த 24 கடைகளில் 13 ஆயிரத்து 430 லிட்டர் மட்டுமே வரப்பெற்று விநியோகம் செய்யப்பட்டது.

இதனால் பொதுமக்களுக்கு தேவையான அளவு அதன் முன்பு வழங்கப்பட்ட அளவு வழங்கப்பட முடியவில்லை. இதுபற்றி மேலதிகாரிகளுக்கு நாங்கள் தெரிவித்துள்ளோம் இவ்வாறு கூறினார்.இதுபற்றி விசாரணை செய்தபோது தமிழகம் முழுவதும் பாஜக மத்திய அரசு மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதற்கான ஒதுக்கீட்டில் 40 முதல் 50 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் அனைத்து ரேஷன் கடைகளிலும் மண்ணெண்ணெய் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு மற்றும் ஏற்கனவே கேஸ் சிலிண்டர்கள் வைத்துள்ளவர்கள் விபரங்கள் போன்றவைகள் திரட்டப்பட்டு 2 சிலிண்டர்கள் வைத்துள்ளவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்குவதிலிருந்து ஒரு லிட்டர் ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.இதுபோல கேஸ் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு 2 லிட்டர் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டில் மத்திய அரசு குறைத்து வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இப்படி ஒரேயடியாக மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால் இதை பயன்படுத்தும் மலைக்கிராம மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். மத்திய பாஜக அரசு கூட்டணி வைத்துள்ள அதிமுக அரசு பொதுமக்களின் இத்தகைய அவதியை கவனத்தில் கொண்டு வரும் மாதங்களில் இந்த குறைபாட்டைக் களைந்து பொதுமக்களுக்கு தேவையான மண்ணெண்ணெயையை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: