திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் ஆடித்திருவிழா ஜூலை 26ல் துவக்கம் வீதியுலாவிற்கு போலீஸ் கட்டுப்பாட்டால் பக்தர்கள் அதிருப்தி

திண்டுக்கல், ஜூலை 18: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா ஜூலை 26ல் துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. இரவு 12மணிக்குள் வீதியுலா நடத்த போலீசார் கட்டுப்பாடு விதிப்பால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆடித்திருவிழா ஜூலை 26ல் காலை 5 மணிக்கு விநாயகர் பூஜை, 5;30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு விசேஷ பூஜை, காலை 6:30 மணிக்கு அம்மன் வீதியுலா ஆரம்பமாகும். வீதியுலா திண்டுக்கல் மேற்கு ரதவீதி, கச்சேரி தெரு, காமராஜபுரம், மவுன்ஸ்புரம், தாடிக்கொம்பு ரோடு முதல் நந்தவனம் ரோடு வரை, பள்ளிவாசல் தெரு, கிழக்கு கோவிந்தாபுரம், அண்ணாநகர், விவோகனந்தாநகர் ஆகிய தெருக்களில் வரும். தரகுமண்டி குமஸ்தாக்கள் சங்க மண்டபம், நாராயண அய்யர் திருமண மண்டபம், மேட்டுராஜக்காபட்டி காளியம்மன் கோயிலில் இரவு தளிகை பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.

மேலும் அம்மன் வீதியுலா மிக குறுகலான சுகாதாரமற்ற பாதை வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. வீதியுலா வரும் தெருக்கள் விபரம் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டது. பந்தல் அமைத்த இடத்தில்தான் திருக்கண் நடத்த இயலும். போலீசார் உத்தரவின் பேரில் இரவு 12 மணிக்குள் வீதியுலா முடிக்க வேண்டும் என்பதால், முக்கிய வீதிகள் மட்டுமே வீதியுலா நடக்கும். இதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு பரம்பரை நிர்வாக அரங்காவலர் சுபாஷினி தெரிவித்தார்.திண்டுக்கல் நகரில் இரவு 12 மணிக்குள் வீதியுலா நிகழ்ச்சிகளை நிறைவு செய்ய போலீசார் கட்டுப்பாடுகள் விதிததுள்ளனர், இதனால் நகரில் பல தெருக்குகளுக்கு அம்மன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போலீசாரின் முடிவால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Related Stories: