கசவனம்பட்டி, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி கிராமங்களுக்கு கூடுதலாக குடிநீர் உதவி இயக்குனர் நடவடிக்கை

செம்பட்டி, ஜூலை 18: கசவனம்பட்டி, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி கிராமங்களுக்கு கூடுதலாக குடிதண்ணீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரியிடம் உதவி இயக்குநர் (தனிக்கை) கங்காதரணி பேச்சுவார்த்தை நடத்தி கூடுதலாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார்.ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு 201 கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காரமடை பகுதியில் உள்ள தரைநிலை தண்ணீர் தொட்டி மூலம் தருமத்துப்பட்டி, கசவனம்பட்டி, கரிசல்பட்டி ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

 காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் தங்கள் கிராமத்திற்கு முறையாக வழங்குவதில்லை என்று பொதுமக்கள் புகார் செய்தனர். இதையடுத்து உதவி இயக்குநர் கங்காதரணி (தனிக்கை) ரெட்டியார்சத்திரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முகமதுமாலிக் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட உதவி நிர்வாக பொறியாளர் ஈஸ்வரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் கூடுதலாக தண்ணீர் வழங்க உத்தரவிட்டனர்.இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய உதவி நிர்வாக பொறியாளர் ஈஸ்வரன் கூறுகையில், ‘ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் செயல்படும் 201 கிராமங்களுக்கான காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குடிநீர்ர் கூடுதலாக தேவைப்படும் கிராமத்திற்கு முறையாக வழங்கவும் தயாராக உள்ளோம்’ என்றார்.

Related Stories: