கொடைக்கானலில் ரூ.20 கோடியில் பல அடுக்கு கார் பார்க்கிங் சட்டப்பேரவையில் அறிவிப்பு

பழநி, ஜூலை 18: கொடைக்கானலில் ரூ.20 கோடியில் பல அடுக்கு கார் பார்க்கிங் வசதி அமைக்கப்பட இருப்பதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.பழநி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது கொடைக்கானல் நகராட்சி. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகை இருந்து கொண்டே இருக்கும். தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமான அளவு இருக்கும். சுற்றுலா பயணிகள் வரும் வாகனம் நிறுத்த கொடைக்கானலில் போதிய இடவசதி இல்லாமல் இருந்தது.

இதனால் கொடைக்கானல் நகரில் ஆங்காங்கே குறுக்கும் நெடுக்குமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் விடுமுறை தினங்களிலும், சீசன் நேரங்களிலும் கொடைக்கானல் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானல் பஸ் நிலையம் முழுவதும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தன. எனவே, கொடைக்கானல் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மல்டி லெவல் கார் பார்க்கிங் (பல அடுக்கு கார் பார்க்கிங்) வசதி ஏற்படுத்தப்பட வேண்டுமென பழநி எம்எல்ஏ ஐபி செந்தில்குமார் நீண்டகாலமாக போக்குவரத்து கழகங்களிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தார்.சட்டமன்றத்திலும் இதுதொடர்பாக பலமுறை பேசி உள்ளார். இதன் பயனாக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை சார்பில் தற்போது ரூ.20 கோடியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி அமைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கேங் மேன் உடல்தகுதி தேர்வு மழையால் தள்ளிவைப்பு