கஞ்சா, மது விற்ற முதியவர்கள் கைது

குளத்தூர், ஜூலை 18: குளத்தூர் பகுதியில் கஞ்சா, மது விற்ற முதியவர்கள் இருவரை போலீசார் கைதுசெய்தனர். குளத்தூர்  கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள நந்தவனப்பகுதியில் எஸ்ஐ செல்லத்துரை  மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். இதில் அப்பகுதியில்  கஞ்சா ற்றுக்கொண்டிருந்த தூத்துக்குடி குமாரர் தெருவை  சேர்ந்த தரன் (56) என்பவரை மடக்கிப் பிடித்து கஞ்சா  பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
 இதே போல் குளத்தூர் அருகே கெச்சிலாபுரம்  பகுதியில் புளியங்குளம் சத்யா நகரை சேர்ந்த  நடராஜன் (63) சட்ட விரோதமாக மதுவிற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் மடக்கிப் பிடித்த போலீசார்  அவரிடமிருந்த 40 மது பாட்டில்கள் மற்றும் ரூ.300 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குகள் பதிந்த போலீசார், இருவரையும் கைதுசெய்தனர்.


Tags :
× RELATED உடன்குடி பள்ளியில் புதிய வகுப்பறை...