எட்டயபுரம் தாலுகாவை விவசாயிகள் முற்றுகை

எட்டயபுரம், ஜூலை 18: அனைத்து வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நல்லையா தலைமை வகித்தார். எட்டயபுரம்  வட்டாரத் தலைவர் ரவீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். விவசாயத்திற்காக கிராம கூட்டுறவு வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்  விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இப்போராட்டத்தில் திரளாகப் பங்கேற்ற விவசாயிகள், பின்னர் இதுகுறித்த கோரிக்கை மனுக்களை  தாசில்தார் வதனாளிடம் அளித்தனர். இதில் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெயராமன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராமசுப்பு, ஜெகதீஸ், தாலுகா குழு உறுப்பினர் சீனிவாசன் கீழஈரால் துரைசாமி மேல ஈரால் திருவடிச்சாமி உள்ளிட்ட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: