காமராஜர் பள்ளியில் விளையாட்டுப் போட்டி

தூத்துக்குடி, ஜூலை 18: தூத்துக்குடி பாரத் ரத்னா காமராஜர் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு போட்டி நடத்தி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடியில் செயல்படும் பாரத் ரத்னா காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி பள்ளிகளுக்கு இடையே சிலம்பம், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை பள்ளித் தாளாளர் பி.எஸ்.பி.கே.ஜே. சோமு துவக்கிவைத்தார். கபடிப் போட்டியில் 11 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் துறைமுகம் பள்ளி முதலிடம் பிடித்தது. கே.டி.கே.பள்ளி 2ம் இடம் பிடித்தது. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் செந்தில்குமரன் பள்ளி முதலிடமும், பாரத்ரத்னா காமராஜர் பள்ளி 2ம் இடமும் பிடித்தன. சிலம்ப போட்டியில்  19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தமிழன் சிலம்பாட்டம் கழகம் முதலிடமும், வி.சிலம்பாட்ட கழகம் 2ம் இடமும் வென்றன. 17 வயதுக்கு உட்டோருக்கான பிரிவில் லடிஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி முதலிடமும், கனேஸ்கா சிலம்பம் பள்ளி 2ம் இடமும் வென்றன. இதையடுத்து வெற்றிபெற்றவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன.  விழாவில் காமராஜ் கல்விக் குழும துணைத்தலைவர் திவாகர், செயலாளர் மோகன்ராஜ், பள்ளி முதல்வர் கார்மல் சுமிதா, ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: