தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் மண்புழு உரம் தயாரிப்பு பயிலரங்கு

தூத்துக்குடி, ஜூலை 18:  தூத்துக்குடி  தூய மரியன்னை கல்லூரியில் மத்திய அரசின் பயோடெக்னாலஜித்துறை பங்களிப்புடன் ஸ்டார் காலேஜ் திட்டத்தின் கீழ் ‘உயிரி திடக்கழிவு மேலாண்மை’ என்ற தலைப்பில்  மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி பயிலரங்கு நடந்தது. இதில்  சவேரியார்புரத்தை சார்ந்த சுய உதவி குழு பெண்கள், இளங்கலை 2ம் ஆண்டு  தாவரவியல் மாணவிகள், தாவரவியல் துறை பேராசிரியர்கள்   பங்கேற்றனர். கன்னியாகுமாரி விவேகானந்த கேந்திரா ஆராய்ச்சி உதவியாளர்  ராஜாமணி  பயிலரங்கை வழிநடத்தினார். உயிரி திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம், அதை உரமாக மாற்றும் முறை குறித்து பேசியதோடு மண்புழு மூலமாக  உரம் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

 ஏற்பாடுகளை ஸ்டார்  காலேஜ் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர் செயலர் ஆரோக்கிய  ஜெனிசிஸ் அல்போன்ஸ், தவிரவியல் துறை ஒருங்கிணைப்பாளர் புளோரா,  தாவரவியல் துறைத் தலைவர் குளோரி மற்றும்  தவிரவியல் துறை  பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
Advertising
Advertising

கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில்

நெல்லை மாவட்டம் கோடகநல்லூரில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் புராண சிறப்பானது. பரீட்சித்து மன்னரையும் நளனையும் தீண்டிய கார்கோடகப் பாம்புக்கு மகாவிஷ்ணு முக்தியளித்த தலமாதலால் இத்தலத்திற்கு கார்கோடக சேத்திரம் என்ற பெயர் உண்டு. இன்றும் இங்கு கருநாக பாம்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. கோடை காலத்தில் இங்கு குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் அது நாளடைவில் மறுவி கோடகநல்லூர் எனவும் கூறப்படுகிறது. இக்கோயில் நவகைலாயத்தில் 3வது தலமாகும். இங்கு சிவபெருமான் செவ்வாய் வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஊரின் வடக்கு முகமாக இக்கோயில் அமைந்துள்ளது. நந்திக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறுவது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இவ்வூரை ஆதிசங்கரர் தட்சிண சிருங்கேரி என்று புகழ்ந்துள்ளார். இங்கு பாயும் தாமிரபரணிக்கு தட்சிண கங்கை என்ற பெயரும் உண்டு.

 மனோன்மணியத்தில் கூறப்படும் சுந்தர முனிவர் என்பது இவ்வூரில் அவதரித்த சுந்தர சுவாமியை குறிக்கும். இவ்வூரில் மேற்கில் உள்ள பெரியபிரான் கோயில் கல்வெட்டுகளில் ‘‘ கோடகனூர்’’ என்ற ‘‘ குலசேகர சதுர்வேதி மங்கலம்’’ என்று இவ்வூரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.இக்கோயிலில் சுவாமி கைலாசநாதர், சிவகாமி அம்மன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றனர்.  தீர்த்தம் தாமிரபரணி, தலவிருட்சம் வில்வமரம், காமிக ஆகமம் படி பூஜைகள் நடக்கிறது. தினமும் காலை 6 மணி விஸ்வரூபம், 9 மணி உச்சிகாலம், மாலை 5.30 மணி சாயரட்சை, அர்த்தசாமம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. தினமும் காலை 6 மணி முதல் 12 மணிவரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறந்திருக்கும்.

இக்கோயிலில் உள்ள சிவனை வழிபடுவது சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில் சிவபெருமானை வழிபடுதலுக்கு சமமாகும். விருச்சிகம், மேஷம் ராசிக்கார்களுக்கான தலமாகவும் விளங்கி வருகிறது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து சேரன் மகாதேவி, முக்கூடல் செல்லும் சாலையில் உள்ள நடுக்கல்லூர் என்ற ஊரில் இருந்து தெற்கே ஒரு கி.மீ தூரத்தில் கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. நெல்லையில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Related Stories: