ஆழ்வார்திருநகரி அருகே பரிதாபம் பைக்குகள் மோதலில் கல்லூரி மாணவர் பலி

ஸ்ரீவைகுண்டம், ஜூலை 18:    ஆழ்வார்திருநகரி அருகே பைக்குகள் ேநருக்கு நேர் மோதிக் கொண்டதில் பொறியியல் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். மெஞ்ஞானபுரம் அடுத்த தாய்விளை பகுதியைச் சேர்ந்த கங்காதரன் மகன் கிருஷ்ண சுரேஷ் (19). மீனாட்சிபட்டி ஹோலிகிராஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்த இவர், தினமும் ஆழ்வார்திருநகரி வரை பைக்கிலும், பின்னர் அங்கிருந்து கல்லூரி பஸ்சிலும் கல்லூரி சென்று திரும்புவது வழக்கம். இதே போல் நேற்று மாலை கல்லூரி முடிந்து பஸ்சில் ஆழ்வார்திருநகரி வந்த இவர், பின்னர் அங்கிருந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டு வந்துகொண்டிருந்தார். ஆழ்வார்திருநகரி அடுத்த அழகியமணவாளபுரம் பகுதியில் வந்தபோது இவரது பைக்கும், எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ண சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: