கழுகுமலை அருகே ஊரணி தூர்வாரும் பணி துவக்கம்

கழுகுமலை, ஜூலை 18: கழுகுமலை அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் 6.44 ஏக்கர் பரப்பளவிலான சீத்தா நாயக்கர் ஊரணியை தூர்வாருவதற்கான பூமி பூஜை நடந்தது. கயத்தார் ஒன்றியம், கழுகுமலை அடுத்த வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில்   கலெக்டர் பிறப்பித்த உத்தரவின் பேரில் ஊருக்கு நூறு  கைகள் திட்டத்தின் கீழ் இங்குள்ள 6.44 ஏக்கர் பரப்பளவு கொண்ட  சீத்தா நாயக்கர் ஊரணியை தூர் வார முடிவுசெய்யப்பட்டது.

 இதையடுத்து பிடிஓ முத்துக்குமார் தலைமையிலும், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன்,  கயத்தாறு ஒன்றியப் பொறியாளர் சங்கர் முன்னிலையில் கிராம ஊரணியை தூர்வாருவதற்கான பணி பூமி பூஜையுடன் துவங்கியது. இதில், ஊர் நாட்டாண்மை, விவசாயிகள், பொது மக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: