மின்னல் தாக்கி தொழிலாளி பலி

விளாத்திகுளம், ஜூலை 18: விளாத்திகுளம் அருகே சின்னவநாயக்கன்பட்டியில் மின்னல் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். விளாத்திகுளம் அடுத்த சின்னவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தங்கசாமி மகன் பாலமுருகன் (27). ஆடு மேய்க்கும் தொழிலாளியான  இவர், நேற்று முன்தினம் மாலை சின்னவநாயக்கன்பட்டி காட்டுப்பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார். இரவு வெகுநேரமாகியும்  வீடு திரும்பாத நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மட்டும் வீடு திரும்பின. இதனால் பதறிய உறவினர்கள், அவரைத் தேடி காட்டுப்பகுதிக்கு சென்றனர்.
 இதில் நேற்று முன்தினம் மாலை மின்னல் தாக்கியதில் உயிரிழந்த பாலமுருகன் அங்குள்ள மரத்தின் கீழே உடல் கருகி கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து விரைந்துசென்ற நாகலாபுரம் போலீசார், உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தூத்துக்குடி வஉசி கல்லூரியில் மனித உரிமைகள் கருத்தரங்கு