×

மாவட்டம் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி

வலங்கைமான், ஜூலை 18: வலங்கைமான் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் சிவசுப்பிரமணியன் தலைமையில் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மூர்த்தி கலந்து கொண்டு 254 மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச லேப்டாக்களை வழங்கினார். அதேபோல் வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் தலைவர் பரிமாள தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குணசேகரன் 694 மாணவிகளுக்கு இலவச மணிக்கணினிகளை வழங்கினார்.

Tags :
× RELATED வாக்களிக்க உற்சாகத்துடன் வந்த மாற்று திறனாளிகள், மூத்தோர்