பிரசவ காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை

திருத்துறைப்பூண்டி, ஜூலை 18: திருத்துறைப்பூண்டி அருகே கர்ப்பிணிகளுக்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி பெரியநாயகிபுரம் அங்கன்வாடியில் நடைபெற்றது. பணியாளர் மேனகா தலைமை வகித்தார். இதில் கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ஆண்டுக்கு மூன்று முறையாவது மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். ஜன்னி தடுப்பூசி போட வேண்டும். கர்ப்பகாலத்தில் இருந்து பிரசவத்திற்கு பின்னும் கால்சியம் சத்து மாத்திரை, காய்கறி, கீரைகள், மீன், முட்டை, இறைச்சி உண்டு வரவேண்டும். கடினவேலை செய்வதை தவிர்த்து ஓய்வு எடுக்க வேண்டும். கர்ப்பகால அபாய அறிகுறைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்று கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. உதவியாளர் ரத்தினகுமாரி நன்றி கூறினார்.

Tags :
× RELATED நீடாமங்கலம் பகுதியில் அறுவடைக்கு...