ஆடி பிறப்பையொட்டி ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு அலங்காரம்

திருத்துறைப்பூண்டி, ஜூலை 18: ஆடி பிறந்ததையொட்டி திருத்துறைப்பூண்டியில் உள்ள 16 அடி உயர ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் புகழ்பெற்ற அபிஷ்ட வரதராஜ பெருமாள் உள்ளது. இக்கோயிலில் 16 அடி உயர விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஆஞ்சநேயருக்கு ஆடி மாதம் முதல் தேதியை முன்னிட்டு வெண்ணை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை தரிசித்தனர்.

Tags :
× RELATED எல்லை பிரச்னையால் விடுபட்டு போன 500மீ...