திருவாரூரில் நடந்தது ஜாம்புவானோடை ஓஎம்ஏ மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

முத்துப்பேட்டை, ஜூலை 18: முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை ஓஎம்ஏ மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் மாணவ, மாணவிகள் காமராஜர் போல் வேடமணிந்து வந்தனர்.முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை ஓஎம்ஏ மெட்ரிக் பள்ளியில் காமராஜரின் 117வது பிறந்தநாள்விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி முதல்வர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். இதில் தாளாளர் மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட காமராஜர் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் மாணவர்கள் பலர் காமராஜர் போன்று வேடம் அணிந்து காமராஜர் பற்றி காமராஜரைப் பற்றி பேசினர். அதனைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர்கள், கிராம முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நீடாமங்கலம் பகுதியில் அறுவடைக்கு...