திருவாரூர் ஆதிசேஷையா கமிட்டி நியமனத்திற்கு எதிர்ப்பு அரசு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூலை 18: அரசுத் துறைகளில் ஆட்குறைப்பு மற்றும் துறைகள் குறைப்பு தொடர்பான நியமிக்கப்பட்டுள்ள ஆதிசேஷையா கமிட்டியை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் நேற்று அரசு பணியாளர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கும் ஓய்வூயதியம் வழங்க வேண்டும். நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத நியாயவிலைக் கடை, டாஸ்மாக் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் ஆட்குறைப்பு மற்றும் துறைகள் குறைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஆதிசேஷையா கமிட்டியை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் சிவப்பு நிற சட்டை மற்றும் வெள்ளை நிற தொப்பி அணிந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சிவக்குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் முருகானந்தம், செந்தில்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் குமார், குணசீலன், புஸ்பநாதன், தங்கராசு, அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி...