×

இலவச லேப்டாப் வழங்கும் விழா

திருத்துறைப்பூண்டி ஜூலை.18: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்தார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அப்துல்முனாப், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ஜோதி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசினர். இதில் ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED நீடாமங்கலம் வேளாண் அறிவியல்...