×

நீடாமங்கலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு பொது விநியோகத்திற்கு 1,250 டன் அரிசி அனுப்பப்பட்டது

நீடாமங்கலம், ஜூலை 18: நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து 1,250 டன் அரிசி மூட்டைகள் பொது விநியோகத்திட்டத்திற்கு நேற்று கன்னியாகுமாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்லம், மன்னார்குடி பகுதியிலிருந்து விவசாயிகளிடமிருந்து அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளும் சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டு அவ்வப்போது வெளி மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்படும். இதேபோல் மத்திய அரசின் சேமிப்பு கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகள் பொது விநியோகத்திட்டத்திற்கு அரிசியும் அனுப்பப்படும். இந்நிலையில் நேற்று பாமனியில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி, மன்னார்குடி மற்றும் கீழப்பாண்டி வட்ட கிடங்குகள், சுந்தரக்கோட்டை நவீனஅரிசி ஆலை ஆகிய இடங்களிலிருந்து 100 லாரிகளில் 1,250 டன் பொது ரக அரிசி மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த அரிசி மூட்டைகளை 21 வேகன்களில் தொழிலாளர்கள் ஏற்றினர். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி மண்டலத்திற்கு பொது வினியோக திட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...