×

அரசியல் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

மன்னார்குடி, ஜூலை 18: கோட்டூரில் அரசியல் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டூர் ஒன்றியக்குழுவின் சார்பில் கட்சியின் முன்னணி ஊழியர்களுக்கான அரசியல், தத்துவார்த்த பயிற்சி முகாம் மற்றும் சிறப்பு கருத்தரங்கம் கோட்டூரில் நடைப்பெற்றது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சிவபுண்ணியம் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு இன்றைய அரசியல் நிலை குறித்து கருத்துரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் அம்புஜம், ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், ஒன்றிய துணை செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய துணை தலைவர் தங்கைய்யன் வரவேற்றார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்