×

கலெக்டர் ஆய்வு முத்துப்பேட்டை அருகே குற்றசம்பவங்கள் நடைபெற்றால் போலீசுக்கு தெரிவிக்க வேண்டும் நல்லுறவு விழிப்புணர்வில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

முத்துப்பேட்டை, ஜூலை 18: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பேட்டை கிராமத்தில் காவல்துறை கிராமமக்கள் நல்லுறவு விழிப்புணர்வு நிகழ்ச்சி டிஎஸ்பி இனிகோ திவ்யன் தலைமையில் நடைபெற்றது. கிராம கமிட்டி நிர்வாகிகள், பள்ளிவாசல், தேவாலயம் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இதில் காவல்துறை சார்பில் மக்கள் பயமின்றி இருக்க வேண்டும். குற்றச் சம்பவம் தெரிந்தால் உடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், தேவையற்ற குற்ற சம்பவங்களை எப்படி தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் சார்பில் குறைநிறைகளையும் கேட்டறிந்தனர்.அப்போது கிராமமக்கள் கூறுகையில், முத்துப்பேட்டை தெற்குதெரு முதல் பேட்டை பூங்காவரை இரவில் குடிமகன்கள் மது அருந்தி அச்சுறுத்தி வருவதால் பெண்கள் இரவில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டும். பங்களாவாசல் முதல் பேட்டை வரை உள்ள மோசமான சாலையால் விபத்துக்கள் நடந்து வருவதுடன் இதன் மூலம் குற்றசம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால் பேட்டை சாலை பணியை விரைந்து முடிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினர். இதற்கு காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்புசெல்வன், கிராம கமிட்டி நிர்வாகிகள் கவுதமன், தர்மலிங்கம், மஸ்தான், பாஜக மாவட்ட தலைவர் பேட்டை சிவா, முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து