×

கள்ளபெரம்பூர் ஏரி தூர்வாரும் பணியை துவங்கிய மக்கள்

தஞ்சை, ஜூலை 18: தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் கிராமத்தில் 42 ஏக்கர் பரப்பில் உள்ள ஏரி சோழர் காலத்தில் வெட்டப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதிகளில் பொழியும் மழைநீர் காட்டாறாக ஓடிவந்து சேருமிடம் தான் கள்ளப்பெரம்பூர் ஏரி என அழைக்கப்படும் செங்கழுநீர் ஏரி. செம்மண் கலந்த நீராக ஓடி வருவதால் இதற்கு செங்கழுநீர் ஏரி என அழைக்கப்படுகிறது. இந்த ஏரி மூலம் 2,662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 8 மதகுகள், 2 வெள்ள நீர் வடிகால் கொண்டுள்ளது. 0.5 டி.எம்.சி. இதன் கொள்ளளவு ஆகும்.கள்ளப்பெரம்பூர், தென்னங்குடி, பிள்ளையார் நத்தம், சீராளூர், சக்கரசாமந்தம், ராயந்தூர், வடகால், சித்திரக்குடி ஆகிய கிராமங்களுக்கு இந்த ஏரி தண்ணீர் செல்கிறது. மேலும் கல்லணையில் இருந்து பிரிந்து வரும் வெண்ணாற்றிலிருந்து கச்சமங்கலம் தடுப்பணையிலிருந்து ஆனந்தகாவிரி வாய்க்கால் வழியாகவும் நீர் வந்து சேருகிறது. இந்த ஏரியை முழுமையாக தூர்வாரி நீர் தேக்கினால் 2 போகம் முழுமையாக சாகுபடி செய்ய முடியும். 2016ம் ஆண்டு செங்கழுநீர் ஏரி சீரமைப்பு என்ற பெயரில் பாசனவசதி பெறும் கிராம மக்கள் ரூ.8 லட்சம் வரை நிதி திரட்டி பணியை துவங்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர். ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போடப்பட்டதால் பணிகள் நடக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக நீண்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த வாரம் அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்று நேற்று தூர்வாரும் பணியை பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்கள் மற்றும் மனித உழைப்பு மூலம் பொதுமக்களே துவங்கினர்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு