கும்பகோணம் காவிரி- வீரசோழன் தலைப்பில் குடிமராமத்து பணி ஆய்வு

கும்பகோணம், ஜூலை 18: கும்பகோணம் அடுத்த மணஞ்சேரியில் காவிரி- வீரசோழன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.கும்பகோணம் அருகே மணஞ்சேரியில் பிரியும் காவிரி மற்றும் வீரசோழன் ஆறுகளின் மூலம் தஞ்சை, நாகை மாவட்டங்களில் 1,50,094 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் மணஞ்சேரி காவிரி- வீரசோழன் ஆறுகளின் தலைப்பில் பிரியும் புதுமண்ணியாறு தாங்கு சுவர் சேதமடைந்து காணப்பட்டது.இதையடுத்து குடிமராமத்து திட்டத்தின்கீ–்ழ் ரூ.20 லட்சத்தில் தாங்குசுவர் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணியை தஞ்சை கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.ஆய்வின்போது மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, ஆடுதுறை காவிரி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மரியசூசை, ஆடுதுறை பாசனப்பிரிவு உதவி பொறியாளர் முத்துமணி உடனிருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: