×

பொன்னமராவதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

பொன்னமராவதி, ஜூலை 18: புதுக்கோட்டை மாவட்டம் ன்னமராவதி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பொன்னமராவதி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் டெங்கு எவ்வாறு பரவுகிறது, டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்கும் முறைகள், சிகிச்சை முறைபற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கொசுபுழு எவ்வாறு இருக்கும் என கொசுப்புழு சேகரிக்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.இதில் தலைமையாசிரியர் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...