×

அறந்தாங்கியில் காமராஜர் பிறந்தநாள் விழா

அறந்தாங்கி, ஜூலை 18: முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அறந்தாங்கியில் உள்ள அவரது சிலைக்கு தமாகாவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.அறந்தாங்கி நகர தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் நகரத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில், காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சிக்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் கராத்தே கண்ணையன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மோகன்ராஜ் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மாநில இணைச் செயலாளர் முத்துக்குமாரசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமையா, மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார், துணைத் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...