×

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாய்களுக்கு இறையாகும் மான்கள் பாதுகாக்க அதிகாரிகள் மெத்தனம்

திருமயம், ஜூலை 18: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நாய்களால் உயிரிழக்கும் மான்கள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்தசில ஆண்டுகளாக வரலாறு காணாத அளவுக்கு கடும் வறட்சி நிலவி வருவதால் அனைத்து நீர் நிலைகளும் வறண்ட நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதே சமயம் தமிழ்நாட்டில் அதிகளவு தைல மரங்களை பயிரிட்டுள்ள மாவட்டமாக புதுக்கோட்டை கருதப்படும் நிலையில் வறட்சி, மழையளவு, நிலத்தடி நீர் குறைவுக்கு காரணம் தைல மரங்களே என ஒருபுறம் மக்கள் போராடி வருகின்றனர். இதனை மெய்பிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் குடிநீர் கிடைக்காமல் மக்களே திண்டாடும் நிலையில் வன உயிரினங்கள் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. காட்டில் வாழும் வன விலங்குகள் ஊருக்குள் வருவதும், நாய்களுக்கு இறையாவதும் நாளுக்கு நாள் அதிகரிகத்து கொண்டே உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என காட்டோரம் வாழும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் தேடி வந்த ஆண் மான் ஒன்றை அப்பகுதியில் உள்ள நாய்கள் துரத்தியது. இதில் வழி தடுமாரி தரி கெட்டு ஓடிய மான் நாளாபுரமும் கம்பி வேலியால் அடைக்கப்பட்டிருந்த பிளாட்டுக்குள் சிக்கிக் கொண்டது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட நாய்கள் மானை கடித்து குதறியது. இந்நிகழ்வு நள்ளிரவு நடந்ததால் மக்கள் யாரும் மானை காப்பாற்ற முடியாமல் போனது. இதனால் இறந்த மானை அங்கேயே நாய்கள் விட்விட்டு சென்றுவிட்டது.இது பற்றி அப்பகுதி மக்கள் நேற்று காலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நாய் கடித்து இறந்த மானை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அழகான நீள கொம்புகளுடன் இறந்து கிடந்த மானை கண்டு அப்பகுதி மக்கள் வேதனையடைந்தனர்.
இதுபற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டபோது,பல்லாயிரம் ஏக்கர் அளவு கொண்ட இந்த காடு மூலம் ஆண்டுதோறும் அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டி வருகின்றனர். அரசு அதிகாரிகள் விவசாயிகள், மக்கள எதிர்க்கும் தைல மரங்களை பராமரிக்க காட்டும் ஆர்வத்தை சிறிய அளவுகூட காட்டில் வாழும் உயிரினங்களை காப்பாற்ற ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் மாவட்டத்தின் மிக பெரிய பரப்பளவை கொண்ட அரிமளம், திருமயம் வனப்பகுதியில் வன விலங்குகளை பாதுகாக்க, அதன் தேவைகளை பூர்த்தியில் செய்வதில் மாவட்ட நிர்வாகம், வன துறையினர் தவறிவிட்டனர். இதன் விளைவாக மான்கள், குரங்குகள், மயில்கள் ஊருக்குள் வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவது ஒருபுறம் இருக்க சமூக விரோதிகள், நாய்களுக்கு இறையாவது தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே அழிவின் விழிம்பு நிலையில் இருக்க வன விலங்குகளை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் போர்கால நடிவக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...