×

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் ஆய்வு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

அரியலூர், ஜூலை 18: அரியலூர் மாவட்டத்தில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் வினய் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை சார்பில் பொய்யூர், அயன் ஆத்தூர், காத்தாங்குடிகாடு, சுத்தமல்லி மற்றும் குருவாலப்பர்கோவில் கிராமங்களில் குடிமராமத்து பணிகள் மற்றும் மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியின்கீழ் நடந்து வரும் பணிகளை கலெக்டர் வினய் ஆய்வு செய்தார். அதன்படி பொய்யூர் கல்லார் ஓடையில் ரூ.29.50 லட்சம் மதிப்பில் அணைக்கட்டு புனரமைப்பு, கரைகள் பலப்படுத்தும் மற்றும் தூர்வாரும் பணி, அயன் ஆத்தூரில் விளாங்குடி ஓடையில் ரூ.29.50 லட்சத்தில் அணைக்கட்டு புனரமைப்பு பணி, காத்தாங்குடிகாடு விளாங்குடி ஓடையின் குறுக்கே ரூ.1.50 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணியை ஆய்வு செய்தார்.
இதைதொடர்ந்து சுத்தமல்லி கிராமத்தில் ரூ.28 லட்சம் மதிப்பில் நீர்ஓடையின் நீளம் 500 மீட்டர், அகலம் 60 மீட்டர் அளவுள்ள உபரிநீர் போக்கி செல்லும் நீர் ஓடை மற்றும் ஓடையின் இருபுறமும் சீரான இடைவெளியில் எல்லை கற்கள் நடப்படும் பணி, குருவாலப்பர்கோவில் கிராமத்தில் பொன்னேரியில் ரூ.20 லட்சம் மதிப்பில் கலிங்குகளுக்கு இடையே கிராவல் பரப்புதல் மற்றும் பொன்னேரி நீர்பிடிப்பு பகுதிகளுக்கு பின்புறம் மண்கரை அமைத்தல் பணியை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், சாந்தி மற்றும் பாசனதாரர் சங்க உறுப்பினர்கள், விவசாயிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...