களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் பேச்சு, கட்டுரை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

பெரம்பலூர், ஜூலை 18: பெரம்பலூர் அருகே உள்ள களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சிநாள் விழா, சுற்றுச்சூழல் மன்றம், சமூக அறிவியல் மன்றங்களின் தொடக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் ஜெயந்தி வரவேற்றார்.முதுகலை ஆசிரியர் சுதாகர், அறிவியல்பாட ஆசிரியர் பார்த்திபன் ஆகியோர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பேசினார். சமூக அறிவியல் பாட ஆசிரியர் கவிதா, மன்றத்தின் செயல்பாடுகளை விளக்கி கூறினார். முன்னதாக காமராஜரின் உருவப்படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் விழாவில் நடந்த பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.Tags :
× RELATED பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை