போலீசாருக்கு எஸ்பி உத்தரவு எளம்பலூர் கிராமத்தில் பள்ளி வளாகம் முன் வடிகால் வாய்க்கால் குப்பை தொட்டியாக மாறிய அவலம்

பெரம்பலூர், ஜூலை 18: எளம்பலூர் கிராமத்தில் உள்ள பள்ளி வளாகம் முன்புள்ள கழிவுநீர் வாய்க்கால் குப்பை தொட்டியாக மாறி வருகிறது. இதனால் மழைநீர் செல்ல முடியாமல் அடைத்து கிடப்பதை ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு எளம்பலூர் மற்றும் இதே ஊராட்சிக்கு உட்பட் எம்ஜிஆர் நகர், காந்தி நகர், சமத்துவபுரம், தண்ணீர்பந்தல், இந்திராநகர் பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தின் முன்பு சுற்றுச்சுவரை ஒட்டியே கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. தற்போது இந்த பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணியாளர்கள், மாணவ, மாணவியர் அங்குள்ள குப்பைகளை சேகரித்து வெளியே எடுத்து வந்து பள்ளியின் முன்புள்ள கழிவுநீர் வாய்க்காலில் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். இவ்வாறு பல நாட்களாக கொட்டி வந்த குப்பை தற்போது இரண்டரை அடி உயரத்துக்கு கழிவுநீர் வாய்க்காலை அடைத்து கொண்டுள்ளது. இதனால் தற்போது கழிவுநீர் மட்டுமன்றி கனமழை பெய்தால்கூட அந்த வாய்க்காலில் வழிந்தோட வழியின்றியே உள்ளது. இதனால் ஊராட்சியின் துப்புரவு பணியாளர்கள் கழிவுநீர் வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதோடு இனி தொடர்ந்து குப்பைகளை கழிவுநீர் வாய்க்காலில் கொட்டாமல் குப்பை தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டுமென பள்ளிக்கு அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

Tags :
× RELATED பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை