பவுர்ணமி கிரிவலம்

பாடாலூர், ஜூலை 18: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் தண்டாயுதபாணி கோயில் மலைமீது அமைந்துள்ளது. இந்த மலையை சுற்றி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று கிரிவலம் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி தண்டாயுதபாணி சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கிரிவலம் நடந்தது. கிரிவலத்தில் செட்டிகுளம், சத்திரமனை, பொம்மனப்பாடி, வேலூர், இரூர், பாடாலூர், குரூர், புதுவயலூர், நக்கசேலம், மாவலிங்கை, நாட்டார்மங்கலம், கூத்தனூர், ஆலத்தூர்கேட் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED பிரதோஷ வழிபாடு