குரும்பலூர் பேரூராட்சியில் மழைவளத்தை பெருக்கும் வகையில் 100 மரக்கன்று நட்டு வைக்கப்பட்டது

பெரம்பலூர், ஜூலை 18: குரும்பலூர் பேரூராட்சியில் மழைவளத்தை பெருக்கும் வகையில் ஒரே நாளில் 100 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.
மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் பேரூராட்சி அலுவலகம் உள் ளிட்ட அரசு அலுவலங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பேரூராட்சி பகுதிகளில் உள்ள கைப்பம்பு, மினிபம்பு இருக்கும் இடங்களிலும் நிலத்தடி நீரை உயர்த்தும் விதமாக மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது. புதிய குடியிருப்புகளிலும், வணிக கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வலியுறுத்தி அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குரும்பலூர், பாளையம், ஈச்சம்பட்டி, மேட்டாங்காடு, புதூர் ஆகிய பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்துக்குள் மழைநீர் சேகரிப்பு தொட்டி இல்லாத வீடுகள், வணிக கட்டிடங்கள் கண்டறியப்பட்டு 30 நாட்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டியை அமைத்து கொள்ள நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் மழைவளத்தை பெருக்கும் விதமாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் முதல்கட்டமாக பேரூராட்சி அலுவலக சுற்றுப்புறங்களில் நேற்று 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்.பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் சாந்தி, மஞ்சுளா, பொது சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், அலுவலக பணியாளர் ராஜ்குமார், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர் அன்பு, பொது சுகாதார பணியாளர்கள் குழந்தை, தனிஸ்லாஸ், ஆசீர்வாதம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்