பைக் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி விவசாயி சாவு

பாடாலூர், ஜூலை 18: பாடாலூர் அருகே பைக் மோதிய விபத்தில் காயமடைந்த விவசாயி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஆலத்தூர் தாலுகா கூத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி (47). இவர் அதே கிராமத்தில் இறந்த ஒருவரை மயானத்தில் அடக்கம் செய்து விட்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக், பெரியசாமி மீது மோதியது. அதில் காயமடைந்த அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிந்து பைக்கை ஓட்டி வந்த கூடலூரை சேர்ந்த செல்வராஜ் மகன் ரவிக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்