பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் சென்டர் மீடியன் கான்கிரீட் போடும் பணிகள் தாமதம் கம்பி வலைகளில் மோதி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார்

பெரம்பலூர், ஜூலை 18: பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கான்கிரீட் திண்டுகளால் சென்டர்மீடியன் அமைக்கும்பணியில். சாலைகளில் மின்விளக்குகள் இல்லாததால் இர வில் கம்பிவலைகளில் மோதி விபத்துகள் ஏற்படுவதாக வாகனஓட்டிகள் புகார் செய்துள்ளனர்.பெரம்பலூர் ஆத்தூர்சாலை விரிவாக்கம் செய்யும்பணிகள் முடிவடைந்த பகுதிக ளில் போக்குவரத்தை சீரமைக்க விரிவுபடுத்தப்பட்ட சாலைகளின் நடுவே கான்கிரீட் திண்டுகளால் சென்டர்மீடியன் அமைக்கும்பணிகள் நடந்துவருகிறது. இதற்காக சாலை யின் நடுவே இரும்புக்கம்பிகளைக் கொண்டு பின்னப்பட்ட வலைகள் வைக்கப்பட்டுள் ளன. இதில் கான்கிரீட் கலவைகள் கொட்டித்தான் சென்டர்மீடியனுக்கான கான்கிரீட் திண்டுகள் அமைக்கப்படும்.இந்நிலையில் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் 50மீட்டர் நீளத்திற்கு வெறும் கம்பிவலைகளை மட்டும் கொண்டுவந்து வைத்துவிட்டு கான்கிரீட் போடும்பணிகளை தாமதப்படுத்தும் நெடுஞ்சாலைத் துறையினர்,இரவுநேரங்களில் கம்பிவலைகளால் விப த்து நேரும்என்பதை அறியாமல் இருந்து வருகின்றனர்.
மின்விளக்குகள் வெளிச்சத் தில் இருக்கும் சென்டர்மீடியனில்கூட அடிக்கடி விபத்துகள் நடந்துவரும் சூழலில், தற்போது ருளில் கம்பிவளை இருப்பது தெரியாத நிலையில் கண்அயரும் வாகன ஓட்டி களால் எளிதில் விபத்துகள் நேரும்அபாயம் உள்ளது. எனவே மின்விளக்கு வசதிகளை செய்திட வேண்டும். அல்லது சிமெண்டு திண்டுகளாக தயாரித்து சாலையின்நடுவே கொண்டுவந்து பொருத்தவேண்டும் என வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத் துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கோக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு