ஜெயங்கொண்டம் அருகே கல்லூரி மாணவி மாயம்

ஜெயங்கொண்டம், ஜூலை 18: ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (52). நெசவு தொழிலாளியான இவரது மகள் விஷ்ணுபிரியா (22). பிஎஸ்.சி. பி.எட் பட்டதாரியான இவர் நேற்று கடைவீதிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தந்தை மணிவண்ணன், உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் மணிவண்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வழக்குப்பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகிறார்.


Tags :
× RELATED பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்