×

அரியலூர் அண்ணா சிலை அருகே மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஏஐடியூசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜூலை 18: மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே ஏஐடியூசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர செயலாளர் சிவஞானம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தில் ரூ.27 கோடியே 86 லட்சத்து 349 கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து 66 பக்கங்கள் அடங்கிய நிதிநிலை அறிக்கை உரையாற்றினார். இதில் ரூ.7 லட்சத்து 3,760 கோடி நிதி பற்றாக்குறை பட்ஜெட்டாக சமர்ப்பித்துள்ள இப்பட்ஜெட்டில் பன்னாட்டு, உள்நாட்டு பெரும் முதலாளிகளுக்கு வரிகுறைப்பு சலுகைகளை அளித்து சாதாரண, நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் விலைவாசிகள் அடங்கிய பெட்ரோல், டீசல் விலையை செஸ் வரியை உயர்த்தியுள்ளது. தொழிலாளர் நலச்சட்டங்கள் சுருக்கப்படுகிறது. சேலம் உருக்காலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் வேலை தீவிரமாகி உள்ளது. 100 நாள் வேலை திட்ட நிதி ஒதுக்கீடு ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட பொது செயலாளர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் உலகநாதன், மாவட்ட தலைவர் தனசிங், ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், அம்மன்னன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ரூ.27 கோடியே 86 லட்சத்து 349 கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து 66 பக்கங்கள் அடங்கிய நிதிநிலை அறிக்கை உரையாற்றினார்.

Tags :
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...