×

பணப்பயன், முன்னுரிமை பாதிக்கும் அபாயம் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் சிவப்பு சட்டை தொப்பி அணிந்து நூதன ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம், ஜூலை 18: 21 மாத ஊதியக்குழு நிலுவை தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் சிவப்பு சட்டை, வெள்ளை தொப்பி அணிந்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் லூயி பிரான்சிஸ் வரவேற்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில அமைப்பு செயலாளர் சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத பணியாளர்களுக்கும் பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஆட்குறைப்பு, துறை குறைப்பு தொடர்பான ஆதிசேஷய்யா கமிட்டியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா