காமராஜர் பிறந்த நாள் விழா

அம்பை,  ஜூலை 18:  கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக  கொண்டாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராகவன்  தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பண்டாசிவன் வரவேற்றார். முன்னாள்  மாணவர் சேக்பீர் இலக்கிய மன்றத்தை துவக்கி வைத்து பேசினார். இதில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில்  பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது.   வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இலஞ்சி மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர்  கல்யாணி சிவகாமிநாதன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியை  தமிழாசிரியர் சந்தோஷ் தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ராமன்  நன்றி கூறினார். இதில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கந்தசாமி, ஆசிரியர்கள்,  மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: