வடக்குசெழியநல்லூர் கோயில் வருஷாபிஷேகம்

நெல்லை, ஜூலை 18:  வடக்குசெழியநல்லூரில் சேனைத்தலைவர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட சயனதுர்க்கை, வைஷ்ணவி துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குடமுழுக்கு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி 1008 சங்குஅபிஷேகம், யாகசாலை பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் தலைவர் பரமசிவம், செயலர் சரவணன், பொருளாளர் பார்த்திபன், உதவி தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: