தெற்குபனவடலியில் வேதசத்திய பெருவிழா

நெல்லை, ஜூலை 18:  தெற்கு பனவடலி யெகோவா ஷாலோம் இல்ல வளாகத்தில், எல்ஏசி ஊழியம் - தேவர்குளம் சேகரம் இணைந்து வேதசத்திய பெருவிழாவை நடத்துகின்றன.  நாளை (19ம் தேதி) முதல் 21ம் தேதி வரை 3 நாட்கள் இப்பெருவிழா நடக்கிறது. மாலை 6.30 மணி முதல் நடைபெறும் வேதசத்திய பெருவிழாவில் திருவனந்தபுரம் எல்ஏசி ஊழிய ஸ்தாபனர் வில்சன் பங்கேற்று தேவசெய்தி வழங்குகிறார்.  மேலும் எல்ஏசி ஊழிய குழுவினர்களின் பாடல் ஆராதனை இடம்பெறுகிறது. தேவர்குளம் சேகரகுரு ஏசாயா ராஜசிங் மற்றும் சபை ஊழியர் சீனிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Tags :
× RELATED மாடு முட்டியதில் பலத்த காயம்...