3 யூனிட் மணலுடன் டிப்பர் லாரி பறிமுதல்

சிவகிரி, ஜூலை 18:  சிவகிரி உள்ளாறு பகுதியில், அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக சிவகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்ஐ துரைசிங்கம் தலைமையிலான போலீசார், உள்ளார் மேற்கே உள்ள கருவாட்டு பாறை பகுதியில் ரோந்து சென்றனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்தனர். அப்போது லாரி டிரைவரும், அவருடன் இருந்தவரும் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினர். போலீசார் லாரியில் சோதனையிட்ட போது, 3 யூனிட் மணல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் லாரி டிரைவர் கோவில்பட்டி அருகே உள்ள கொடுக்கான்பாறையை சேர்ந்த மகேந்திரன் (24) என்பதும், உடனிருந்தவர் உள்ளாறு கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் (35) என்றும் தெரிந்தது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED ஆயர் பங்கேற்பு கருத்தபிள்ளையூரில்...