×

சோலார் வீரர்கள் பயிற்சி திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்

நாகை, ஜூலை 18: தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் நடைபெற்ற சோலார் வீரர்கள் பயிற்சி திட்டத்தில் சிறப்பாக பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் சுரேஷ்குமார் சான்றிதழ்களை வழங்கினார்.தமிழகத்தில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டினை அதிகப்படுத்தவும் மரபுசாரா எரிசக்தி பயன்பாடுகள் குறிப்பாக சூரிய மின்சக்தியின் நன்மைகள் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதனத்தின் செயல்பாடுகள் மற்றும் அனைத்து வீடுகள், தனியார் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள் மற்றும் விவசாய பம்புகள் ஆகியவற்றில் சூரியஒளி மின்திட்டத்தினை அவரவர் தேவைகளுக்கு ஏற்றார் போல் மின் உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதனை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, கல்லூரி மாணவ மாணவியார்களுக்கான டெடா சோலார் வீரர்கள் என்னும் பயிற்சி திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி முகமையில் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடைபெற்றது.இதில் சிறப்பாக பயிற்சி பெற்று சூரியஒளி மின்சாரம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பணியாற்றிய 26 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சுரேஷ்குமார் சான்றிதழ்களை வழங்கினார்.மாவட்ட டெடா உதவி பொறியாளார் ராஜராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...